Quantcast
Channel: கவிதை குவியல்
Viewing all 82 articles
Browse latest View live

அன்பு

$
0
0
சிலர் அன்பை
வார்த்தைகளால் உணர்த்தலாம்!

சிலர் அன்பை
உணர்வுகளால் உணர்த்தலாம்!

ஆனால்
சிலர்
அன்பை உணர முடியாது!

அதை காலம்
உணர்த்தும்போது ....?

பயணம்

$
0
0
நான்
திரும்பி
வரமுடியாத பயணம்
என் மரணம்!

மாற்றம்

$
0
0

அழைக்காத கைபேசிக்கும்
வராத குறுங்தகவலுக்கும்
காத்திருக்கிறேன்!

ஏனோ
நான் இப்படி மாறிப்போனது
ஏனோ!!

தெரிந்தவர்கள்

$
0
0
எல்லோருக்கம்
என்னை தெரிந்தாலும்
என்னை புரிந்தவர்கள்
வெகு சிலரே!!

நேசி

$
0
0
யாருடன் வாழ முடியுமோ
அவர்களை நேசிப்பதைவிட!

யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களை அதிகமாக நேசியுங்கள்!!

சந்தோசம்

$
0
0
சின்ன சின்ன விஷயங்கள்
சந்தோசம் தரும்!

ஆனால் சந்தோசம்
சின்ன விசயமில்லை!!

அனுபவித்து வாழுங்கள் வாழ்க்கையை!!!

உரிமை

$
0
0
பிடித்தவர்களிடம்
கேட்காமலே எடுத்துகொள்ளும்
அதிகபடியான உரிமை!

இருவரையும்
வருத்தப்பட வைக்கிறது
சில சமயங்களில்!

வலி

$
0
0
நிராகரிப்பினால் கிடைக்கும் வலி
என்னவென்று உனக்கு நடக்கும் வரை
அதை உன்னால் உணர முடியாது!!

சோகம்

$
0
0
இறந்த கால
சோகத்தின் வேர்கள்...

நிகழ்கால சுகங்களை
மட்டும் அல்ல...

எதிர்கால சொர்க்கத்தையும்
சிதைத்து விடும்...!!!

ஆறுதல்

$
0
0
நீ அழும்போது
முதலில் ஆறுதல் சொல்வது
நீ
நேசித்தவராக இருக்கமாட்டார்கள்!

உன்னை
நேசித்தவராகத்தான் இருப்பார்கள்!!

இழப்பு

$
0
0
இழக்க
விரும்பாவிட்டாலும்!

இழந்து தான்
ஆக வேண்டி
இருக்கிறது சிலவற்றை
வாழ்வில்!!

கஷ்டம்

$
0
0
யாரையும் கஷ்டப்படுத்த கூடாது
என்று நினைப்பவன் தான்!

எல்லோராலும் கஷ்டத்தை
அனுபவிக்கிறான்!!

துணிச்சல்

$
0
0
இறப்பதற்கு
ஒரு நொடி
துணிச்சல் போதும்!

ஆனால்
வாழ்வதற்கு
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்!!

அன்பு

$
0
0
தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!

புரிதல்

$
0
0
புரிதல் இல்லாத
உறவுகளிடம்...

பிரிதல் உண்டாகும்!

பிரிதல் இல்லாத
உறவுகள் ...

உலகில் இல்லை!
ஆனாலும்...

உலகில் உலவும்
உறவுகளில் எல்லாம்
புரிதல் என்பது
புரியாத...
புதிராகத்தான் உள்ளது...!!!

மதிப்பு

$
0
0
உன்னை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசனும்!

உன்னை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசனும்!!

பேச்சு

$
0
0
பேசி பயனில்லை என்னும் போது
மெளனம் சிறந்தது!

பேசுவதிலே அர்த்தம் இல்லை
என்னும் போது
பிரிவும் சிறந்தது!!

அன்பு

$
0
0
அன்புக்கு மீறி
அன்பு வைத்தால் சின்ன சின்ன
பிரச்சனைகள் கூட பெரிய
தவறாக தெரிகிறது

கொடுமை

$
0
0
தப்பே செய்யாமல்
தலை குனிந்து நிற்கும் சூழ்நிலை
மிகவும் கொடுமையானது

ஞாபக மறதி

$
0
0
வாழ்க்கையில் நிம்மதி
தேவையென்றால்
ஞாபக மறதி
நிச்சயம் தேவை
Viewing all 82 articles
Browse latest View live